இந்தியா

ஞானேஷ் குமாரை தகுதி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் - எதிர்க்கட்சிகள் திட்டம்!

தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் மற்ற எதிர்க்கட்சிகளை அணுகியுள்ளதாக தகவல்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தகுதி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு ஆணையர்களான சுக்வீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், கடந்த 10 மாதங்களில் சுமார் 14 முறை முக்கிய முடிவுகளுக்கு அதிகாரப்பூர்வமாக தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தும், அவை நடைமுறைப்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மற்ற எதிர்க்கட்சிகளை அணுகியுள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்து, அதோடு அவரை கைது செய்யவும் வலியுறுத்தி, செப்.25ம் தேதி மாநில தேர்தல் ஆணையங்களுக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறும், தலைமை காங்கிரஸ் மாநிலப் பிரிவுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT