இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு - பிரதமர் பெருமிதம்

நம் நாட்டின் அசைக்க முடியாத நிலைப்பாட்டையும், ஒற்றுமையையும் ஆபரேஷன் சிந்தூர் வெளிக்கொணர்ந்தது.

மே 7, 2025 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ஆயுத படைகள் ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி தாக்குதல் நடத்தி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா சென்றவர்களை தாக்கினர். இதுகுறித்து நாடே அதிர்ச்சியில் இருந்து நிலையில், நமது ஆயுத படையினர் அவர்களின் தைரியத்தையும், துல்லியதையும், உறுதியையும் வெளிப்படுத்தினர்.

அப்பாவி மக்களை கொடுமை படுத்தியவர்களுக்கு சிறந்த பாடம் கற்றுக்கொடுத்து பதிலடி கொடுத்தனர்.

அத்தகைய படை வீரர்கள் அனைவருக்கும் ஒட்டு மொத்த தேசமே தலை வணங்கி மரியாதையை செலுத்தினோம். நம் நாட்டின் அசைக்க முடியாத நிலைப்பாட்டையும், ஒற்றுமையையும் ஆபரேஷன் சிந்தூர் வெளிக்கொணர்ந்தது.

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா அடைந்த வெற்றி மாபெரும் வெற்றி என்றும் வரலாறு படைத்த சாதனை எனவும் நம் தேசத்தின் சாதனையை மகிழ்வித்து, அனைவரின் அர்ப்பணிப்பை எண்ணி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் கொள்கிறார்கள். இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி மனம் மகிழ்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT