ராகுல் காந்தி
இந்தியா

ராம்லீலா பேரணி எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் போராட்டம்: ராகுல் காந்தி

இந்தியா கூட்டணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை பிரமாண்ட பேரணி நடைபெற இருக்கிறது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞனேஷ் குமார் பதவி விலகக்கோரி டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 1-ந்தேதி (ஞாயிறு) இந்தியா கூட்டணி சார்பில் மிகப்பெரிய பேரணி நடைபெற இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி தலைமை தாங்குகிறது. குறைந்தது 10 லட்சம் பேர் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த பேரணியில் கலந்து கொள்ள இருக்கின்றன. அதேபோல் சிஜேபி-யும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

public impeachment நிகழ்ச்சி ஒத்திவைப்பு

இதற்கிடையே இன்று ஞானேஷ் குமாருக்கு எதிராக சட்டப்பூர்வமல்லாமல் மக்கள் மத்தியில் "public impeachment (பதவி நீக்க நடவடிக்கை)" நிகழ்ச்சியை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், டெல்லியில் காலையில் இருந்து மழை பெய்து வருவதால், இந்த நிகழ்ச்சி, நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற இருக்கும் பேரணி குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியதாவது:-

நவம்பர் 1-ந்தேதி (ஞாயிறு) ராம்லீலா மைதானத்தை நோக்கி ஒரு பேரணி நடைபெறவுள்ளது. இதில் எதிர்க்கட்சியினர், அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சமூக சேவகர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் போராட்டம்

உங்களில் பலரும் இதில் பங்கேற்க விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். இந்த இரண்டு நிகழ்வுகளுமே, நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்தில் உள்ள ஞானேஷ் குமாரும் அவரது குழுவினரும் இணைந்து இந்திய ஜனநாயகத்தைச் சிதைப்பதற்கு எதிரானதாகும்.

இது பல போராட்டங்கள் அல்ல. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் போராட்டம்" என்றார்.

SCROLL FOR NEXT