சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் இடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் ஒரு முத்தரப்பு உச்சி மாநாட்டைக் கூட்டி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து அமைதிக்கான கூட்டு பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டனர்.
இந்நிலையில் மூன்று அதிபர்களின் இந்த சந்திப்பை குறிப்பிட்டு, ஒருபோதும் அந்த மேசையில் அமரமுடியாது என பிரதமர் மோடியை சாடியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், இந்தக் கூட்டத்தில் கண்டிப்பாக இந்தியப் பிரதமரும் கலந்துகொண்டிருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில்.,
“காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், இந்தியாவின் பிரதமர் இந்த மேசையில் அமர்ந்திருப்பார். சமரசம் செய்துகொண்ட ஒரு பிரதமரால் ஒருபோதும் இந்த மேசையில் அமர முடியாது,” என பதிவிட்டுள்ளார்.
மூன்று முக்கிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பு, நடைபெற்று வரும் போர்கள் மற்றும் அணு ஆயுதக் கிடங்குகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் மீது கவனம் செலுத்தியது.
மேலும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விசாரித்ததோடு, சர்வதேச பாதுகாப்பை பேணுவதற்கும் உறுதி பூண்டுள்ளனர்.