மத்திய சுகாதாரத்துறை மந்திரி மனுசுக் மாண்டவியா 
இந்தியா

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தீவிர முன்னேற்பாடுகள் - பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

இந்தியாவில் பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மனுசுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று ஒமைக்ரான் மற்றும் கொரோனா தடுப்பூசி நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மனுசுக் மாண்டவியா விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: 

இந்தியாவில் ஒமைக்ரான் வைரசுக்கு 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் தினமும் நிபுணர்களை கொண்டு ஒமைக்ரான் தொற்று சூழல் குறித்து  கண்காணித்து வருகிறோம். கொரோனா தொற்று பரவல் முதல் மற்றும் இரண்டாவது அலைகளை கட்டுப்படுத்திய அனுபவம் எங்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவலை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையை உறுதிபடுத்தி உள்ளது.  

முக்கியமான மருந்துகளை இருப்பில் வைக்க நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.  இன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் /யூனியன் பிரதேசங்களிலும் போதுமான அளவு தடுப்பூசிகள் உள்ளன, மொத்தம் 17 கோடி டோஸ்கள் அவர்களிடம் உள்ளது. தடுப்பூசிகள் தயாரிப்பு திறன் அதிகரித்துள்ளது. இன்று இந்தியா ஒரு 

மாதத்திற்கு 31 கோடி தடுப்பூசி டோஸ்களை தயாரிக்கும் திறனை பெற்றுள்ளது.  அடுத்த இரண்டு மாதங்களில் அது 45 கோடி டோஸ்களாக அதிகரிக்கும். 

பிரதமர் மோடியின் தலைமை மேற்கொண்ட நடவடிக்கையால் நாடு முழுவதும் சுகாதார ஊழியர்களை கொண்டு 88 சதவீதம் பேருக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 58 சதவீத மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.  இதன் மூலம் நாட்டில் பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மனுசுக் மாண்டவியா கூறியுள்ளார்.