இந்தியா

Petrol Price | ஈரான் போரால் அடுத்த அதிர்ச்சி... பிரீமியம் பெட்ரோல் விலை ரூ. 2 உயர்வு

விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதட்டம் காரணமாக எரிபொருள் சந்தைகளில் ஏற்பட்டு வரும் தாக்கத்தை தொடர்ந்து பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக பெட்ரோல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பிரீமியம் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை. பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.09 முதல் ரூ.2.35 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரீமியம் பெட்ரோல் உயர்தர கார்கள் மற்றும் 200சிசி-க்கும் மேல் உள்ள பைக்குகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண பெட்ரோலை விட கூடுதல் ரசாயனக்கலவைகள் கலக்கப்படும் பிரீமியம் பெட்ரோல் என்ஜின் செயல்திறனை அதிகரிக்கும்.

SCROLL FOR NEXT