இந்தியா

மீண்டும் மாநில அந்தஸ்து கோரும் போராட்டம் - இந்தியா கூட்டணிக்கு அழைப்பு விடுத்த ஜம்மு முதல்வர்

பேரணியில் கலந்துகொள்ளுமாறு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் கடிதம் எழுத இருப்பதாக தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கோரி தாம் முன்மொழிந்துள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட அப்துல்லா, அடுத்த மாதம் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் போது நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ளுமாறு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் கடிதம் எழுத இருப்பதாக தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை டெல்லிக்கு எடுத்து செல்லப்போவதாக அப்துல்லாவின் கட்சி கடந்த வாரம் அறிவித்தது. மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தங்களது அனைத்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களுடன் போராட போவதாக அக்கட்சி கூறியுள்ளது.

மத்திய அரசுடன் மோதலை தவிர்த்து ஒத்துழைப்பைத் தேர்ந்தெடுத்த அப்துல்லா, தனது அரசியல் செயல்திட்டத்தை மீட்டெடுப்பதற்காகப் புதிய தொடக்கத்தை மேற்கொள்வது போல் தெரிகிறது.