வீடியோ  
இந்தியா

ஆளே மாறிட்டீங்க.. திருமண விழாவில் மோடியுடன் கார்கே கலகல - வீடியோ உண்மையா?

கார்கே, "நீங்கள் ஆள் கொஞ்சம் மாறிவிட்டீர்கள்" என கூற, அதற்கு மோடி "ஓ அப்படியா" என கூறுவது பதிவாகியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் பிரிவு தலைவர் சரத்சந்திர பவார் மகளும் எம்.பியுமான சுப்ரியா சுலேயின் மகள் ரேவதி சுலேயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 10 அன்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் தனித்தனியே கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் பின்னணியில், பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோருடன் கலகலப்பாகப் பேசுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது ரேவதி சுலே திருமண வரவேற்பில் எடுக்கப்பட்ட வீடியோ எனக் கூறிப் பரப்பப்பட்டு வருகிறது.

ஜூலை 20, சிஜேபி பேரணியில் மாணவர்கள் மீது போலீஸ் அடக்குமுறை தொடர்பாக மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில் இவ்வாறு கார்கேவும், மோடியும், பிரியங்காவும் சந்தித்து கொண்டது சங்கடமான ஒன்று என்று இணையத்தில் இந்த வீடியோவை பார்த்த பலரும் கருதினர்.

ஆனால், இந்த வீடியோ பழையது என்பதும், தற்போதைய நிகழ்வோடு இதற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் உண்மை சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது.

வீடியோ

வைரலாகும் வீடியோவில் பிரதமர் மோடியை பார்த்து கார்கே, "நீங்கள் ஆள் கொஞ்சம் மாறிவிட்டீர்கள்" என கூற, அதற்கு மோடி "ஓ அப்படியா" என கூறுவது பதிவாகியுள்ளது. மேலும் பிரியங்காவுடன் பேசுவதும் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ 'கவுண்டே சிங்' என்ற இன்ஸ்டாகிராம் பயனரால் கடந்த 2025 அன்று பதிவேற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் மகன் திருமண விழாவின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே இன்ஸ்டாகிராம் பயனர், பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17, 2025 அன்றும் இதே வீடியோவைப் பகிர்ந்து பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எனவே, இந்த வீடியோ 2025ஆம் ஆண்டிலிருந்தே இணையத்தில் உள்ளது என்பது தெளிவாகிறது.

ஊர்ஜிதம்

ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற ரேவதி சுலேயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடையின் நிறமும், வைரல் வீடியோவில் அவர் அணிந்திருக்கும் கோட்டின் நிறமும் வேறுபடுகின்றன.

எனவே பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் உரையாடும் வீடியோ 2025ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோவா என்பதும் இது சுப்ரியா சுலேயின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது அல்ல என்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது.