கோப்பு புகைப்படம் 
இந்தியா

ரூ.30 முதல் ரூ.40 வரை சமையல் எண்ணெய் விலை குறைப்பு: மாநிலங்கள் உறுதி செய்ய வலியுறுத்தல்

பண்டிகை காலத்தில் நுகர்வோர் நலன் கருதி இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புது டெல்லி: 

இந்தியாவில் அதானி வில்மா் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சமையல் எண்ணெய் விலையை 10 முதல் 15 சதவீதம் வரை குறைத்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. பண்டிகை காலத்தில் நுகர்வோர் நலன் கருதி இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விலைகுறைப்பு பற்றி உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே கூறுகையில்,  இந்தியாவின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் சமையல் எண்ணெய் விலையை 10 முதல் 15 சதவீதம் வரை குறைத்துள்ளன. 

இதன் மூலம் அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி) ரூ.30 முதல் ரூ.40 வரை குறைந்துள்ளது. குறைக்கப்பட்ட புதிய விலையில் சமையல் எண்ணெய் விற்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.