இந்தியா

ஒடிசாவில் பிரபலமாகும் ‘எறும்பு’ சட்னி

ஒடிசா மாநிலத்தில் எறும்பு சட்னி பிரபலமாகி வருகிறது.

சில ஓட்டல்களிலும் இந்த வகை சட்னி விற்பனை செய்யப்படுகிறது. ருசியாக இருப்பதால் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர்.

சட்னி தயாரிக்க காய்கறிகள் அல்லது மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒடிசா மாநிலத்தில் எறும்பு சட்னி பிரபலமாகி வருகிறது. அங்குள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில், மரக் கூடுகளிலிருந்து சிவப்பு நெசவு எறும்புகளும் அவற்றின் குஞ்சுகளும் சேகரிக்கப்பட்டு, காரமான உள்ளூர் சட்னியாக மாற்றப்படுகின்றன.

பழங்குடி சமூகம்

இந்தத் சட்னியை உள்ளூர் பழங்குடி சமூகத்தினர் தலைமுறை தலைமுறையாக உண்டு வருகின்றனர். தற்போது பொதுமக்களிடமும் எறும்பு சட்னி பிரபலமாகி வருகிறது.

சிவப்பு எறும்புகள்

இந்த சிவப்பு எறும்புகள் மரங்களில் உள்ள இலைகளை ஒன்றாகச் சேர்த்துத் கூடுகளை கட்டுகின்றன. அவற்றை தேடி சென்று கூண்டோடு பிடித்து வருகின்றனர். பின்னர் தண்ணீரில் சுத்தம் செய்கின்றனர்.

சமையல்

எறும்புகள் உப்பு, பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து அரைக்கப்படுகின்றன. சில சமையல் குறிப்புகளில் புதினாவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கலவை பொதுவாக அம்மி கல்லில் அறைக்கப்படுகிறது.

ஓட்டல்கள்

எறும்பு சட்னியின் சுவை காரமாகவும் புளிப்பாகவும் இருக்கும். இது உள்ளூர் உணவுகள், சாதம் மற்றும் தினை வகைகளுடன் உண்ணப்படுகிறது. சில ஓட்டல்களிலும் இந்த வகை சட்னி விற்பனை செய்யப்படுகிறது. ருசியாக இருப்பதால் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர்.

SCROLL FOR NEXT