இந்தியா

ஆரம்ப சம்பளம் ரூ.6,000... இப்போ கோடி கணக்கில் சொத்து, கிலோ கணக்கில் தங்கம்! லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய ஒடிசா பொறியாளர்!

பாலிகுடா அரசு உதவி பொறியாளர் பைகுந்த நாத் பெஹராவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் பாலிகுடாவில் அரசு உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் பைகுந்த நாத் பெஹரா (52).

இவரிடம் கோடி கணக்கில் சொத்துக்கள் இருப்பதாக கேள்விபட்ட வருமான வரித்துறையினர், 2 லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 5 டி.எஸ்.பி.க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், ஊழியர்கள் ஆகியோர் வீட்டை முற்றுகையிட்டனர்.

அவரது வீட்டில் 341 கிராம் தங்க நகைகள், ரூ.45 லட்சம் வங்கி டெபாசிட்டுகள் மற்றும்  5 இடங்களில் அடுக்கு மாடி கட்டிடங்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 1999-ல் வெறும் 6,000 ரூபாய் ஆரம்பச் சம்பளத்தில் பணியில் சேர்ந்த இவர், 2016 அன்று உதவி பொறியாளராக பதவி உயர்வு பெற்று தான் முதலில் நபரங்பூர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்.

பல தில்லாலங்கடி வேலைகளால் தொடர்ந்து பணி மாறுதல்களைப் பெற்று, தற்போது பாலிகுடாவுக்கு பணியாற்றி வருகிறார்.

ஒரு சாதாரண அரசு ஊழியருக்கு புவனேஸ்வரம் சந்திரசேகர்பூர், சைலாஸ்ரீ, பாட்டியா, பாண்டுவா உள்ளிட்ட முக்கிய நகர பகுதிகளில் பல பங்களாக்கள் இருப்பதும், கட்டுக்கட்டாக பணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதும் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து போலீசார் பைகுந்த நாத்வை கைது செய்து, எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தது கூட்டாளிகள் யார் யார் இருக்கிறார்கள்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.