இந்தியா

மேற்கு வங்கத்தில் 9-ந்தேதி பதவி ஏற்பு விழா: பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக முதல்முறையாக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. 190 இடங்களுக்கு மேல் பிடித்து முதன்முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. 15 வருட மம்தா பானர்ஜியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் யார்? என்பதை தேர்ந்தெடுக்க அமித் ஷா மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுவேந்து அதிகாரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வருகிற 9-ந்தேதி பதவி ஏற்கும் விழா நடைபெற இருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் சமிக் பட்டச்சார்யா தெரிவித்துள்ளார். அன்றைய தினம் காலை 10 மணிக்கு மத்திய கொல்கத்தாவில் உள்ள பிரிகேடு பரேடு மைதானததில் பதவி ஏற்பு விழா நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தேசிய தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.