இந்தியா

நான் பழகியவர் இவர் இல்லை! மணமகனை பார்த்ததும் மணமகள் அலறல்- அடிதடியில் முடிந்த திருமண நிகழ்ச்சி

உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் திருமணத்தின்போது நான் காதலித்தவர் இவர் இல்லையென மணமகள் கூறியதால் கலவரம் ஏற்பட்டது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த தேவேந்திர சிங் பரிமாருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் உடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்டுள்ளார். அவருடன் நம்பர் கொடுத்தள்ளார். இவரும் டெலிபோன் மூலம் பேசியுள்ளனர். இந்த பழக்கம் நீண்ட நாட்களாக நீடித்துள்ளது.

பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறியது. நீண்டகாலமாக காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இரு வீட்டாரும் சேர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக இருந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் மே 12-ஆம் தேதி (நேற்று) திருமணம் நடைபெறுவதற்கான வேலைகள் நடைபெற்றன. மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் பக்கத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தனர். பிறகு ஊர்வலம் விழாவிற்காக மணமகளின் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது மணமக்கள் நேரில் பார்த்துக் கொண்டபோது வழக்கறிஞரான மணமகள் திடீரென்று நான் காதலித்தவர் இவர் இல்லை. இவர் யாரென்றே எனக்கு தெரியாது. நான் டெலிபோனில் பேசியபோது, அவர் தன்னை ராகுல் என்று தெரிவித்தார் என்று பெரிய குண்டை தூக்கிப் போட்டார்.

பின்னர் இருவீட்டாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் மணமகள் வீட்டார், மணமகன் மற்றும் அவரது உறவினர்களை கடுமையாக தாக்கியதில், மணமகன் காயம் அடைந்தார். இன்ஸ்டாகிராம் காதல் திருமணத்தின்போது வன்முறையில் முடிந்துள்ளது.

மணமகனை தாக்கியது தொடர்பாக போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர்.