இந்தியா

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் 3-வது மிகப்பெரிய நாடு எது தெரியுமா?

ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக சவுதி அரேபியாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்த கச்சா எண்ணெய் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

இந்தியா அதிகப்படியாக ரஷியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து அதிக அளவில் கக்சா எண்ணெய்-ஐ கொள்முதல் செய்கிறது.

கச்சா எண்ணெய் அதிக அளவில் கொள்முதல் செய்வதில் இந்தியா 3-வது இடம்

உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் 3-வது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. சவுதி அரேபியா, அமெரிக்கா, ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.

உக்ரைன்- ரஷியா போர்

உக்ரைன்- ரஷியா இடையிலான போரின்போது, ரஷியா மலிவான விலைக்கு கச்சா எண்ணெய் வழங்க முன்வந்தது. இதை இந்தியா மற்றும் இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன. இதனால் உக்ரைன்- ரஷியா போர் தொடங்கிய பிறகு இந்தியா ரஷியாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்-ஐ கொள்முதல் செய்தது. இந்தியாவில கடந்த சில வருடங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

அமெரிக்காவின் மிரட்டல்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்திய பொருட்களுக்கு அதிக வரி வதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். ஆனால், இந்தியா அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை. ஆனால் டிரம்ப் வரி விதிப்பு, ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து மிரட்டியதால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்வதை குறைத்துக் கொள்ள இந்தியா சம்மதம் தெரிவித்தது.

வெனிசுலாவை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அமெரிக்கா

அதேவேளையில் வெனிசுலா நாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் அமெரிக்கா கொண்டு வந்தது. அந்நாட்டின் அதிபரை சிறைப்பிடித்து, தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றது அமெரிக்கா. அத்துடன் வெனிசுலா கச்சா எண்ணெய், அமெரிக்காவில் நிர்வகிக்கப்படும் என்றார். வெனிசுலாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தார்.

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கான தடை நீக்கம்

இதற்கிடையே ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது. இதனால் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் வாய்ப்பு விரிவடைந்தது.

அமெரிக்கா- ஈரான் போர்

இந்த நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அமெரிக்கா- ஈரான் இடையில் போர் தொடங்கியது. இந்த போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. சவுதி அரேபியாவிடம் இருந்து இந்தியாவால் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ள அமெரிக்கா விலக்கு அளித்தது.

மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவில் இருந்து அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்ய விரும்பின. அதனடிப்படையில் இந்த மாதத்தில் இதுவரை வெனிசுலாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் கொள்ளமுதல் செய்துள்ளது. ரஷியா, ஐக்கிய அரபு அமீரகத்தை தவிர்த்து இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் 3-வது நாடாக வெனிசுலா மாறியுள்ளது.

கச்சா எண்ணெய் கொள்முதல் விவரம்

ஏப்ரல் மாதம் ஒரு நாளைக்கு 2.83 பீப்பாய் கச்சா எண்ணெய் சப்ளை என்பது இந்த மாதத்தில் நாள் ஒன்றுக்கு 4.17 லட்சமாக அதிகரித்துள்ளது.

கடந்த மாதத்தை விட இந்த மாதம் இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் ஒரு நாளைக்கு 4.9 மில்லியன் பேரலாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இது ஒரு நாளைக்கு 5.2 மில்லியன் பேரலாக இருந்தது.

ஈரானில் இருந்து பிப்ரவரி மாதம் இந்தியா ஒரு நாளைக்கு 9.69 லட்சம் பேரல் எண்ணெய் இறக்குமதி செய்தது. இது மே மாதத்தில் 51 ஆயிரம் என்ற வகையில் வெகுவாக குறைந்துள்ளது. அமெரிக்கா தடையை நீக்கியதால், கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதம் ஈரானிடம் இருந்து இந்தயிா எண்ணெய் வாங்குவதை தொடங்கியது, ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினையால் அது தற்போது பாதிப்படைந்துள்ளது.

சவுதி அரேபியா 3-வது மிகப்பெரிய நாடாக இருந்தது. பிப்ரவரி மாதம் சண்டை தொடங்கிய பின், இந்தியாவுக்கு சப்ளை செய்யம் பேரல்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளைக்கு 6.7 லட்சம் என்ற வகைளில் இருந்தது. தற்போது 3.40 லட்சமாக குறைந்துளளது.