கோப்பு புகைப்படம் 
இந்தியா

பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மருத்துவ சான்றிதழ் கட்டாயமில்லை - மத்திய அரசு அறிவிப்பு

தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் முன்களப்பணியாளர்களாக கருதப்பட்டு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான தகுதியை பெறுவர் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மாலை மலர்

புது டெல்லி:

இந்தியாவில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் ஜனவரி 10-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மருத்துவ சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஆனால் அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். 

தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் முன்களப்பணியாளர்களாக கருதப்பட்டு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான தகுதியை பெறுவர். இவர்கள் அனைவரும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கழிந்த பிறகே பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.