இந்தியா

ஜார்கண்டில் 18 மணி நேரமாக செயல்படாத அரசு: ஆளுநருக்கு சம்பாய் சோரன் கடிதம்

ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ராஞ்சி:

ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் சோரன் கொண்டுவரப்பட்டார்.

இதற்கிடையே, ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சம்பாய் சோரன் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

தற்போது கடந்த 18 மணி நேரமாக மாநிலத்தில் அரசு செயல்படவில்லை. இங்கு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக இருப்பதால் நீங்கள் விரைவில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, மாநிலத்தைக் குழப்பத்திலிருந்து விடுவிப்பீர்கள் என நாங்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில மக்கள் எதிர்பார்க்கிறோம்.

மேலும், தம்மை ஆதரிக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்று பெரும்பான்மை ஆதரவு இருப்பதை உறுதிசெய்ய முடியும் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT