தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரி, கேரளா ஆசாம் ஆகிய மாநிலங்களில் நாளை மறுதினம் 9-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த மூன்று மாநிலத்திற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. கேரளா மற்றும் புதுச்சேரியில் மாலை 6 மணியில் இருந்து வாக்குப்பதிவுக்கான 48 மணி நேர 'silence period' தொடங்குகிறது. இது அசாம் மாநிலத்திற்கு 5-ந்தேதியில் இருந்து தொடங்குகிறது. தேர்தல் வாக்குப்பதிவு தொடங்க இருக்கும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும். இதுதான் 'Silence Period' ஆகும்.
இந்த நிலையில்தான் நாளை காலை 7 மணி முதல் மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு முடிவடையும் வரை (ஏப்ரல் 29-ந்தேதி) கருத்துக் கணிப்பு (Exit Poll) நடத்தவோ அல்லது ஒளிபரப்பவோ கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் கணிப்பு நடத்தினாலோ அல்லது ஒளிபரப்பு செய்தாலோ இரண்டு ஆண்டுகள் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந்தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.