அமித் ஷா குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இருந்து ராகுல் விடுவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைத்துள்ளது.
2018ஆம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான அவதூறு வழக்கில், உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
2018 கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பெங்களூருவில் நடைபெற்ற ஒரு பேரணியில் ராகுல் காந்தி, அமித் ஷா மீது கொலை குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அப்படிப்பட்ட ஒருவர் நாட்டின் மத்திய அமைச்சராக இருப்பதாகவும் பேசியிருந்தார்.
அமித் ஷாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக அதே ஆண்டு பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதன் காரணமாக, ராகுல் மீது கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2023ல் இந்த வழக்கில் ஆஜராகுமாறு ராகுலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது . பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி பிற்பாடு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று (அக்டோபர் 26) வழங்கப்படும் என சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் முன்னரே தெரிவித்திருந்தது.
இதன்படி இன்று ராகுல் காந்தி சூல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவர் முன்னிலையில் இந்த வழக்கு மீதான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் அவதூறானவை அல்ல என்று கூறி அவரை விடுவித்தது.
அவர் மீது பதிவு செய்யப்பட்ட இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின்கீழ் கீழான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.