ஜே.பி நட்டா, கார்கே  
இந்தியா

'சுத்திகரிப்பு' சடங்கு செய்தவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.. ஜே.பி நட்டாவுக்கு கார்கே கடிதம்

ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

தான் பேசிச்சென்ற இடத்தை சுத்தம் செய்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவை தலைவர் ஜே.பி நட்டாவுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

மல்லிகார்ஜூன கார்கே

உத்​த​ராகண்ட் மாநிலம் ஹல்த்​வானி​யில் உள்ள ராம்​லீலா மைதானத்​தில் கடந்த 8ந் தேதி நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே பங்​கேற்​றார்.

அதனைத் தொடர்ந்​து 10ந் தேதி அந்த மைதானத்​தில் வலது​சாரி அமைப்​பினர் மற்​றும் பா.ஜ.க. - ஆர்​.எஸ்.​எஸ். ஆதர​வாளர்​கள் ‘சுத்​தி​கரிப்​பு’ (புனிதப்​படுத்​தும்) சடங்​கு​களை மேற்​கொண்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்தது.

இந்த விவ​காரத்தை காங்​கிரஸ் செயற்​குழு கூட்​டத்​தி​லும், பாராளுமன்றத்திலும் கார்​கேவே நேரடி​யாக எழுப்​பி தனது ஆதங்​கத்​தைப் பதிவு செய்து இருந்​தார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அவர் மீது உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

கடிதம்

இந்த நிலையில் மல்லிகார்ஜூன கார்கே, மாநிலங்களவை தலைவரும் மத்திய மந்திரியுமான ஜே.பி. நட்டாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் புனிதப்படுத்தும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.

பதிவு

இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது,

"ஹல்த்வானியில் நான் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு பிறகு ராம்லீலா மைதானத்தில் மேற் கொள்ளப்பட்ட புனிதப்படுத்துதல் நடவடிக்கை தொடர்பான விவகாரம் குறித்து மேல் சபையின் அவைத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன்.

அவையில் அவர் அளித்து இருந்த உறுதியை அவருக்கு நினைவூட்டியதுடன் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளேன்.

பாடம் புகட்டுவது அவசியம்

24 நாட்கள் ஆன பிறகும் இந்த இழிவான செயலுக்கு காரணமானவர்கள் மற்றும் அமைப்புகள் மீது இதுவரை எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் ( எப். ஐ. ஆர்.) பதிவு செய்யப்படவில்லை.

அந்தக் கடிதத்தில், இந்த விவகாரம் என்னையோ அல்லது காங்கிரசின் தலைவராக எனது பதவியையோ மட்டும் சார்ந்ததல்ல.

ஒவ்வொரு நாளும் இத்தகைய கொடூரமான யதார்த்தத்தை எதிர்கொள்ளும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுடன் பரந்த அளவில் இது தொடர்புடையது. இத்தகைய தவறு செய்பவர்களுக்கு பாடம் புகட்டுவது அவசியமாகும்.

இந்த உண்மைகள் மற்றும் மேல் சபையில் அளிக்கப்பட்ட உறுதியின் அடிப்படை யில் ஹல்த்வானியில் எனது பொதுக்கூட்டத்திற்கு பிறகு ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ‘சுத்திகரிப்பு’ சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரகண்ட் முதல்வருக்கு ஜேபி நட்டா அறிவுறுத்த வேண்டும்" என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.