இந்தியா

கேரளாவில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்: நிதின் நபின் உறுதி

பா.ஜ.க. தேசிய தலைவரான நிதின் நபின் இருநாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் நிதின் நபின் கலந்துகொண்டார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

பா.ஜ.க. தேசிய தலைவரான நிதின் நபின் இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட நிதின் நபின் பேசியதாவது:

இந்த ஆண்டு நடைபெற உள்ள கேரள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். மாநில மக்களின் நம்பிக்கையை பாஜக பெற்றுள்ளது.

கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு நிறைய செய்துள்ளது. மாநிலத்திற்கு வழங்கப்பட்ட கடன்களில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாநிலத்திற்கு வழங்கப்படும் மானிய உதவிகளை இரட்டிப்பாக்குதல் ஆகியவை அடங்கும்.

மத்திய அரசு ஒருபோதும் மாநிலத்தின் மீது கஞ்சத்தனமான அணுகுமுறையைக் காட்டவில்லை. இந்தப் புள்ளிவிவரங்கள் அதைக் குறிக்கின்றன என தெரிவித்தார்.