இந்தியா

மும்பை, ஜெய்ப்பூர், ராய்ப்பூர் மைதானங்களில் போட்டி நடத்த தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

ராய்ப்பூர், மும்பை, ஜெய்ப்பூர் மைதானங்களில் ஐ.பி.எல். தொடர் நடைபெற்றது.

ஆடுகளம் மற்றும் மைதானங்களைப் பராமரிக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீருக்குப் பதிலாக, நிலத்தடி நீர் அல்லது நன்னீரைப் பயன்படுத்த வேண்டும், நிலத்தடி நீரைச் சேமித்தல், வெளியேற்றுதல் மற்றும் மீட்டெடுப்பதற்காக மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தி இருந்தது.

இதற்கிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரின்போது ராய்ப்பூரின் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியம், ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் ஸ்டேடியம், மும்பையின் டாக்டர் டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியம் ஆகியவை ஆடுகளம் மற்றும் மைதானங்களைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படும் நீரின் மூலத்தை வெளியிடத் தவறியது தொடர்பான வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், ராய்ப்பூரின் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியம், ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் ஸ்டேடியம், மும்பையின் டாக்டர் டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியம் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடத்த தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு முறையான விளக்கம் அளிக்கும் வரை இந்த மைதானங்களில் எந்த ஒரு விளையாட்டு நடவடிக்கையும் நடைபெறக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.