இந்தியா

அடுத்த கல்வித்துறை அமைச்சர் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

மத்திய கல்வி அமைச்சராக பதவி வகித்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, உணவு மற்றும் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா:

டெல்லியில் நீட் தேர்விற்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து சிஜேபி கட்சியினருடன் பாஜக மூத்த அமைச்சர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சிஜேபி கட்சியின் சார்பாக மூன்று முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு தெரிவித்தது. பின்னர் போராட்டம் கைவிடப்படுவதாக சிஜேபி அறிவித்தது.

மேலும் நான்கு வார காலத்திற்குள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து, மத்திய கல்வித் துறை பதவி காலியாக இருந்தது.

கல்வித்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு:

இந்நிலையில் கர்நாடகாவின் முன்னாள் பாஜக மாநில தலைவரும், இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது.