ஜார்க்கண்டில் நேற்று மாலை திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி மற்றும் அவர்களது உறவினர்கள் இன்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள தம்பூர் பகுதியில் இருக்கும் மணமகனின் வீட்டுக்கு வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். தேசிய நெடுஞ்சாலை 74-ல் வந்தபோது எதிரே வந்த டெம்போ மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 2 வாகனங்களும் அருகில் இருந்த பள்ளம் ஒன்றில் கவிழ்ந்தன. மணமக்கள் வந்த வாகனத்தில் 11 பேர் இருந்தனர். அவர்களில் மணமகள், மணமகன், அவருடைய சகோதரர் உள்பட உறவினர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் வேன் டிரைவர் உயிரிழந்தார்.
அடர்பனி, தெளிவற்ற வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.