கேரளம் மாநிலத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) 16-வது சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 4-ந்தேதி நடைபெற்று காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழா நாளை (21-ந் தேதி) காலை 9 மணிக்கு நடக்கிறது.
சட்டமன்ற கட்டிடத்தில் தற்காலிக சபாநாயகர் சுதாகரன் முன்னிலையில் அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர். நாளை மறுநாள் (22-ந் தேதி) சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார்.