வங்கக்கடலின் வடக்கு மற்றும் அதனையொட்டிய தெற்கு வங்காள தேச பகுதிகளில் நேற்று வளி மண்டல சுழற்சி இருந்தது.
இந்த தீவிர வளி மண்டல சுழற்சியின் தாக்கத்தால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடற்கரைக்கு அப்பால் வடமேற்கு வங்கக்கடலில் இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்புடைய வளி மண்டல சுழற்சியானது கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ. உயரம் வரை பரவி உள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 தினங்களுக்கு வடக்கு ஒடிசா மற்றும் கங்கை சமவெளி பகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்காளம் வழியாக மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 4 மணி நேரத்தில் ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பலத்த மழை காரணமாக பூரி மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.