நாடு முழுவதும் ஜூன் 21 அன்று நடைபெற உள்ள நீட் யுஜி மறுதேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான, ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்திலிருந்து தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .
தேர்வு முகமையின் சமீபத்திய அறிவிப்பின்படி, தேர்வுக்கு 15 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டு, தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடைபெற உள்ளது.
மே.3 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 22,05,035 மாணவர்கள் எழுதினர். வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக மே 12 அன்று இத்தேர்வு தேசிய தேர்வு முகமையால் ரத்து செய்யப்பட்டது.