மே 3 நடைபெற்ற இளநிலை மருத்துப்படிப்புகளுக்குக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு வரும் ஜுன் 21 அன்று நடைபெற உள்ளது.
மேலும் முந்தைய தேர்வுக்கு செலுத்திய கட்டணமும் மாணவர்களுக்கு திருப்பி வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மேலும் மறுதேர்வுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 21 நடைபெறும் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் எந்த நகரில் தேர்வு எழுத வேண்டும் என்ற City Intimation Slip விரைவில் வெளியாக உள்ளது.
City Intimation Slip, மே 31க்குள் இணையதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி பதிவிறக்கம் செய்வது?
neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் உள்ள 'Advance City Intimation Link'-ஐக் கிளிக் செய்யவும். உங்களது Login விவரங்களை உள்ளிடவும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நகரத்தை சரிபார்த்து, அந்தப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
ஹால் டிக்கெட்
நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூன் 14ஆம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்பட்டிருக்கும். இம்முறை தேர்வு மதியம் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை, 3 மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெறும்.
Refund
இதனிடையே ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான கட்டணத்தை திருப்பி மாணவர்களுக்கு செலுத்தும் நடைமுறையை ஜூன் 22 வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.
மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை இந்தத் தேதிக்குள் அதிகாரபூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள Refund போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும்.
இதுவரை சுமார் 13 லட்சம் மாணவர்கள் தங்களது வங்கி விவரங்களைப் புதுப்பித்துள்ளனர். மொத்தம் 22 லட்சம் மாணவர்கள் மே 3 அன்று தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது