கடந்த மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால், தேர்வு நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னே வினாத்தாள்கள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து சிபிஐ விசாரணையில் ஈடுபட்டு, முறைகேடுகள் நடந்ததாக உறுதி செய்யப்பட்டதால் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
அதன் பிறகு, ஜூன் 21 தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜூன் 21 அன்று நீட் மறுதேர்வு நடக்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு ஜூன் 22 வரை டெலிகிராம் செயலியை தற்காலிகமாக முடங்கியுள்ளது. மேலும், ஜூன் 30 வரை'எடிட்டிங்' செய்வதற்கான வசதியும் முடக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த தடைக்கு சிபிஎஸ்சி விடைத்தாள் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த மாணவர் சார்த்தக் சித்தாந்த் "தேசிய தேர்வு முகமையின் திறமையின்மை மற்றும் சொந்த நிர்வாகத் தோல்விகளை மூடிமறைக்கவே ஒட்டுமொத்த டெலிகிராம் செயலியை தடை செய்து மத்திய அரசு நாடகம் நடத்தியுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.