மே 3 நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மறுதேர்வு வரும் ஜூன் 21 நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மறுதேர்வு வினாத்தாள்களை பாதுகாக்க இந்திய ராணுவம் களமிறங்க உள்ளது.
வினாத்தாள்களை அச்சகங்களில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்க, இந்திய விமானப்படையின் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தற்போது தபால் நெட்வொர்க் மற்றும் வங்கி லாக்கர்கள் மூலமாகவே வினாத்தாள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
ஆனால், இந்த நடைமுறையில் பல இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டதை அடுத்தே, ராணுவ தளவாடங்களின் உதவியைப் பெற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.