மக்களவை  
இந்தியா

கடும் அமளிக்கு மத்தியில் 'தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா' மக்களவையில் தாக்கல்.. அம்சங்கள் என்ன?

சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து உடனே விவாதகிக்க இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மீண்டும் இரு அவைகளும் கூடின.

மசோதா தாக்கல்

மக்களவை மீண்டும் கூடிய உடனே, 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கால் அவையில் தாக்கல் செய்யப்பட்டது.

வினாத்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிக்கும் விதமாக சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மசோதாவின் அம்சங்கள்

முறைகேட்டின் தீவிரத்தை பொறுத்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும். திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை; ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

மேல் முறையீடு வழக்குகள் மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும். தவறு செய்யும் நிறுவனங்கள் பொதுத்தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடை காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளிட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ளன

அவையில் அமளி

மசோதா அறிமுகத்தின்போதும் அதை தொடர்ந்தும், ஜூலை 20 அன்று மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை 20 தாக்குதல்

ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.

அப்போது அவர்கள் மீது டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.

ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.