இந்தியா

நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்: இன்று அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் - பிரதமர் மோடி

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாட்டில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முதலில் வலியுறுத்தினர்.

இந்தியா கூட்டணி

தற்போது 'இந்தியா' கூட்டணியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பதவி விலகலுக்கான வலியுறுத்தல்கள் தினம்தோறும் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விரைவு கோர்ட்டுகள்

நமது இளைஞர்களின் நலனையும், எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு கோர்ட்டுகளை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இதுதொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம்.

மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். நமது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்கள் தப்பிக்க விடப்பட மாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

சிஜேபி போராட்டம்

இந்நிலையில் சிஜேபி போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,

அமைச்சரவை கூட்டம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு குறித்து விசாரிப்பதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். தேர்வு முறையை மாற்றியமைப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

மசோதா

நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.