தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்விற்கான விரிவான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் எவ்வித சிரமமும் இன்றி தேர்வு மையத்திற்குள் நுழைவதை உறுதி செய்ய, ஆடை கட்டுப்பாடு, கொண்டு வர வேண்டிய கட்டாய ஆவணங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்த முழுமையான விவரங்களை NTA அறிவித்துள்ளது.
தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 1:30 மணிக்கு தேர்வு மையத்தின் முதன்மை வாயில் பூட்டப்படும். அதன் பிறகு வரும் எந்தவொரு மாணவரும், எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு மதியம் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடைபெறும்.
தேர்வு மைய நுழைவு வாயிலில் சோதனை செய்யப்படுவதால், பின்வரும் ஆவணங்களை மாணவர்கள் தவறாமல் கையில் வைத்திருக்க வேண்டும்:
NTA இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட நீட் ஹால் டிக்கெட்டின் பிரிண்ட் அவுட், அதில் சுயவிவரப் பிரகடனப் படிவம் பூர்த்தி செய்யப்பட்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
அட்டெண்டன்ஸ் ஷீட்டில் ஒட்டுவதற்காக 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் ஹால் டிக்கெட்டில் ஒட்டுவதற்கான ஒரு போஸ்ட்கார்ட் அளவு (4”x6”) புகைப்படம்.
ஆதார் கார்டு, இ-ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் அட்டை மட்டுமே அனுமதிக்கப்படும் (மொபைலில் இருக்கும் டிஜிட்டல் நகல்கள் செல்லாது).
PwBD பிரிவின் கீழ் சலுகை கோரும் மாணவர்கள், அதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழைக் கொண்டு வர வேண்டும்.
தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க ஆடை விஷயத்தில் NTA மிகக் கடுமையான விதிகளை வகுத்துள்ளது.
லேசான நிறமுடைய, அரைக்கை சட்டைகள் அல்லது டி-ஷர்ட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மாணவிகள் எளிய சுடிதார் அல்லது பேண்ட் அணியலாம்.
முழுக்கை சட்டைகள், பெரிய பட்டன்கள் கொண்ட ஆடைகள், அதிக எம்பிராய்டரி மற்றும் ஜிப்பர்கள் கொண்ட ஆடைகள், ஜீன்ஸ் மற்றும் லேயர் ஆடைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.
குறைந்த உயரமுள்ள செருப்புகள் மற்றும் சாண்டல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பூட்ஸ் அல்லது ஷூக்கள் அணியக் கூடாது.
ஹிஜாப், புர்கா, தலைப்பாகை அல்லது கவா போன்ற மதச்சார்பு உடைகள் அல்லது சின்னங்களை அணியும் மாணவர்கள், கூடுதல் சோதனைக்காக குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே (மதியம் 12:30 மணிக்குள்) தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.
* ஆவணங்கள் அடங்கிய கோப்பு.
* வெளிப்படையான குடிநீர் பாட்டில்
* மழையிலிருந்து ஹால் டிக்கெட்டைப் பாதுகாக்க ஒரு வெளிப்படையான பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தலாம்.
*(குறிப்பு: எழுதப் பயன்படும் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா தேர்வு மையத்திலேயே வழங்கப்படும்).
* மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், புளூடூத் ஹெட்செட்டுகள், இயர்போன்கள், கால்குலேட்டர்கள் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களும்.
* பேனா, பென்சில், ஜியோமிதி பாக்ஸ், ஸ்கேல், எரேசர், லாக் டேபிள் போன்ற எழுதுபொருட்கள்.
* கைப்பை (Handbags), பர்ஸ், பெல்ட், தொப்பி, கூலிங் கிளாஸ்.
* மோதிரம், கம்மல், நெக்லஸ், பிரேஸ்லெட் போன்ற உலோக ஆபரணங்கள்.
* தண்ணீர் பாட்டில்கள் (டிரான்ஸ்பரன்ட் தவிர) மற்றும் உணவுப் பொருட்கள் (நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவர் அனுமதியுடன் பழங்கள் அனுமதிக்கப்படும்).
தேர்வு மையங்களில் மாணவர்களின் உடைமைகளைப் பாதுகாப்பாக வைக்க எவ்வித லாக்கர் அல்லது சேமிப்பு வசதிகளும் இருக்காது. எனவே, தடை செய்யப்பட்ட பொருட்களைத் தேர்வு மையத்திற்கு எடுத்து வருவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களும் மாணவர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.