நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது.
சிஜேபி போராட்டத்தின்போது மாணவர்கள் மீதான தாக்குதல், மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு ஆகியவை குறித்து இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலுவான குரல் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று மக்களவையில், நீட் தேர்வை தடை செய்வது தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி திமுக மக்களவை முழு தலைவர் எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
அந்த நோட்டீஸில், நீட் தேர்வுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று டி.ஆர். பாலு வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, 267ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், “நாட்டின் மருத்துவக் கல்வி கனவோடு உள்ள மாணவர்களின் அவல நிலை, நீட் தேர்வால் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான தற்கொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல விருதுநகர் காங்கிரஸ் எம்.பியும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர்
மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் ஒன்றை வழங்கியுள்ளார். அதில், டெல்லி போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதா கூறி, அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவர்கள் மீது தாக்குதல்
ஜூலை 20, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சிஜேபி தலைமையில் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது அவர்கள் மீது டெல்லி காவல்துறை, ஆர்ஏஎப் மத்திய படையினர் லத்திகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகுகள் வீசப்பட்டன.
ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 60 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.