இந்தியா

தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளில் கூட வெல்லாது- சித்தராமையா

எங்கேயும் 'மோடி அலை' இல்லை. பாஜகவும் இதை அறிந்துள்ளது.'இந்தியா' கூட்டணி நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும்.

மாலை மலர்

வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் கூட வெற்றி பெறாது.

இது தொடர்பாக, நாடு முழுவதிலும் இருந்து எனக்கு தகவல்கள் வருகின்றன.

எங்கேயும் 'மோடி அலை' இல்லை. பாஜகவும் இதை அறிந்துள்ளது. அதனால்தான் '400க்கு மேல்' என உளவியல் ரீதியாக போலி தோற்றத்தை உண்டாக்க முயற்சித்து வருகின்றனர்.

'இந்தியா' கூட்டணி நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.