பிரதமர் மோடி 
இந்தியா

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் வெற்றிச்சுடர் ஏற்றிய பிரதமர் மோடி

பாகிஸ்தான் உடனான போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி வெற்றிச்சுடர் ஏற்றி வைத்தார்.

மாலை மலர்

இந்தியாவுக்கும்- பாகிஸ்தானுக்கும் இடையில் 1971-ம் ஆண்டு போர் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் ஆகிறது.

பாகிஸ்தானை போரில் வென்ற தினத்தை கொண்டாடும் வகையில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி வெற்றி சுடரை ஏற்றி வைத்தார். பின்னர் வெற்றிச்சுடர் அணையாத விளக்குடன் இணைக்கப்பட்டது.

அத்துடன் தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.