இந்தியா

ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி - சுகாதார நிபுணர்கள் தீவிர ஆய்வு

மர்ம காய்ச்சல் தாக்கி பலியான குழந்தைகள் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் சலும்பர் மாவட்டத்துக்கு உட்பட்ட லசாடியா பகுதியில் உள்ள 2 கிராமங்களில் கடந்த 1 முதல் 5-ந்தேதி வரை 5 குழந்தைகள் பலியாகினர். மர்ம காய்ச்சல் தாக்கி பலியான இந்த குழந்தைகள் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

அடுத்தடுத்து குழந்தைகள் பலியான சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே பல்வேறு நிபுணர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டு தீவிர ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர்.

மாநில முதல்-மந்திரி பஜன்லால் சர்மாவும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். குழந்தைகள் இறப்புக்கான காரணம் அறியவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.