இந்தியா

டிக்-டாக் பிரபலத்துடன் நடனம் ஆடிய போலீஸ்காரர்

மும்பையில் நடன காவலர் என பெயர் பெற்ற அமோல் காம்ப்ளேவுடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது.

சமூக வலைதளமான டிக்-டாக்கில் உலக அளவில் பிரபலம் ஆனவர் நோயல் ராபின்சன். இவர் சமீபத்தில் மும்பை வந்திருந்தார். அப்போது மும்பையில் அவர் சந்தித்த சிலருடன் நடனம் ஆடிய வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

அதில் அவர் மும்பையில் நடன காவலர் என பெயர் பெற்ற அமோல் காம்ப்ளேவுடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நோயல் ராபின்சன் ஒரு கொள்ளையன் போல நடிக்கும் காட்சிகள் உள்ளன. அதாவது நோயல் ராபின்சன் சாலையில் முதியவர் ஒருவரிடம் இருந்து போனை பறித்து கொண்டு தப்பிக்கும் போது அவர் போலீஸ்காரர் அமோல் காம்ப்ளே மீது மோதுவது போலவும், பின்னர் இருவரும் நடனம் ஆடும் காட்சிகளும் உள்ளது.

இந்த வீடியோவுடன் பதிவில், நீங்கள் எங்கிருந்து வந்தாலும் பரவாயில்லை. மும்பை காவல் துறைக்கு முன்னால் நீங்கள் குற்றம் செய்தால் இவ்வாறு முடியும். ஏனென்றால் நாங்கள் மும்பை போலீஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது.

SCROLL FOR NEXT