இந்தியா

மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி ராணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ராணாவின் வழக்கறிஞர் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தார். உடல்நிலை குறித்த நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் உசேன் ராணாவின் நீதிமன்றக் காவலை ஜூலை 9 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றக் காவல் முடிவடைந்த பிறகு, வீடியோ கான்பரன்சிங் மூலம் ராணா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சிறப்பு நீதிபதி சந்தர்ஜித் சிங் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதற்கிடையில், ராணாவின் வழக்கறிஞர் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்ததை அடுத்து, ஜூன் 9 ஆம் தேதிக்குள் அவரது உடல்நிலை குறித்த நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

பாகிஸ்தான்-கனடா தொழிலதிபரும் முன்னாள் பாகிஸ்தான் ராணுவ மருத்துவருமான ராணா, மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.