மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் (சமாஜ்வாடி கட்சி)யும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் பானர்ஜிக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியது.
மேற்கு வங்கத்தில் ஜனநாயக செயல்முறைகள் சீர்குலைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளைப் பாதிக்க மத்திய அமைப்புகளும் நிர்வாக இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது என குற்றம் சாட்டியது.
இந்நிலையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி.யான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலகாதது, மத்திய அரசுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் எதிரான அவரது போராட்டத்தின் ஒரு பகுதி.
மத்திய அரசின் சர்வாதிகாரத்திற்கும் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான நடத்தைக்கும் எதிராக ஒன்றிணைய வேண்டியது அவசியம்.
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அடிமையாக மாறிவிட்டது என குற்றம் சாட்டினார்.