நித்தியானந்த் ராய் 
இந்தியா

மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய்க்கு கொரோனா

தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள நித்தியானந்த் ராய் வலியுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

புது டெல்லி:

மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நித்தியானந்த் ராய் கூறியதாவது:-

கடந்த 2 நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா பாசிடிவ் என தெரிய வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.

இவ்வாறு நித்தியானந்த் ராய் தெரிவித்தார்.