இந்தியா

"மேஜிக்" வித்தகரான மோடி - ரசித்த குழந்தைகள்

பிரதமர் அலுவலகத்திற்கு குழந்தைகள் வந்திருந்தனர்மறக்க முடியாத தருணங்கள் என குறுஞ்செய்தியையும் பதிவிட்டுள்ளார் பிரதமர்

மாலை மலர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

இன்று அவரை காண சில குழந்தைகள் அவரது அலுவலகத்திற்கு வந்தார்கள்.

அவர்களுடன் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டார். அப்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் சில 'மேஜிக்' செய்து காட்டினார். இதில் ஒரு நாணயத்தை குழந்தைகளின் நெற்றியில் ஒட்டி அதனை மறைய செய்தார். அதை குழந்தைகள் ரசித்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோவை தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் பிரதமர் பதிவிட்டார். அது இணையத்தில் பரவி வருகிறது. அதில் "எனது இளைய நண்பர்களுடன் சில மறக்க முடியாத தருணங்கள்" என ஒர் குறுஞ்செய்தியையும் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட "ரக்ஷாபந்தன்" பண்டிகையின் போது சில குழந்தைகள் அவரை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.