திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி.யாக உள்ளவர் மஹுவா மொய்த்ரா. கடந்த 14-ந்தேதி (நேற்று) இரவு மேற் வங்க மாநிலத்தில் உள்ள நாடியா (Nadia) நிர்வாகம், இவர் தங்கியிருந்த அறையை உடனடியாக காலி செய்யும்படி வலியுறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று இரவு மஹுவா மொய்த்ரா இணைய தளத்தில் பதிவிட்டுள்ள செய்தில் "Dear IPU {(Inter-Parliamentary Union- நாடாளுமன்றங்களுக்கு இடையிலான யூனியன்) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உலகளாவிய அமைப்பு}, இந்தியாவில் நான் எம்.பி.யாக உள்ளேன்.
அதிகாரப்பூர்வ விருந்தினர் மாளிகையில் என்னுடைய அறையில் இருந்து வெளியேறுமாறு இரவு 9.97 மணிக்கு அரசு கேட்டுக்கொண்டது. பின்னர் 10.52 மணிக்கு மீண்டும் வெளியேறுமாறு வலியுறுத்தியது. விருந்தினர் மாளிகை்கு வெளியே பாஜக கூட்டம் என் உயிரை பறிக்க துடித்துக் கொண்டிருந்த வேலையில் இவ்வாறு நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். இந்தியாவில் ஜனநாயகம் இந்த நிலையில்தான் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மஹுவா மொய்த்ராவுக்கு சசி தரூர் ஆதரவு தெரிவித்து்ளளார். இது தொடர்பாக சசி தரூர் கூறுகையில் "அனைத்து ஜனநாயகக் கட்சியினரும் அவருடன் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும். ஒரு கும்பல் அவரை தாக்கத் துடித்து கொண்டிருக்கும் நிலையில் அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஒரு ஜனநாயகத்தில் இத்தகைய அடிப்படை விஷயங்களை எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக, நமது சுதந்திரப் போராட்டத்தின் உச்சகட்டத்தைக் குறிக்கும் நாளில் இது இன்னும் தேவையற்றது" எனத் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் தலையிடுமாறு கோரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மஹுவா மொய்த்ரா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் "தனக்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டிருந்த சர்க்யூட் ஹவுஸ் (அரசு விருந்தினர் இல்லம்) அறையை காலி செய்யுமாறு நாடியா மாவட்ட நிர்வாகம் தன்னை வற்புறுத்தியது. இவ்விவகாரத்தை அவசரமாகக் கவனித்து, ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கி, நாடு முழுவதும் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்ணியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அறையை காலி செய்ய மறுத்ததைத் தொடர்ந்து, சர்க்யூட் ஹவுஸுக்கு வெளியே திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டனர். தனக்கு எதிரான துன்புறுத்தலுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாக கிருஷ்ணாநகர் தொகுதி எம்.பி.யான மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்குப் பிறகு கிருஷ்ணாநகரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் இரவு தங்குவதற்காக மொய்த்ரா அங்கு சென்றிருந்தார். ஒரு எம்.பி.யாக அங்கு தங்குவதற்கு தனக்கு உரிமை உண்டு என்று கூறிய அவர், தன்னைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் நள்ளிரவில் வெளியேறுமாறு மாவட்ட அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்தார்.
"மாலை 6.15 மணியளவில் நான் சர்க்யூட் ஹவுஸ் அறைக்குச் சென்றேன். ஊழியர்கள் எனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அந்த அறை தங்குவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. மாலை 7 மணிக்கு எனது அறைக்குத் தேநீர் கொண்டு வரப்பட்டது. இரவு 9.20 மணிக்கு இரவு உணவு அங்கேயே பரிமாறப்பட்டது.
இரவு 9.47 மணிக்கு, நாடியா மாவட்ட கூடுதல் ஆட்சியரிடமிருந்து (Additional District Magistrate) எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதற்கான காரணத்தை நான் கேட்டபோது, மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது, தான் அந்தச் செய்தியைத் தெரிவிப்பவர் மட்டுமே என்று அவர் கூறினார்" என்று மஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டியுள்ளார்.