எண்ணெய் பால்போல் வழிந்த காட்சியை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் கோவிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சின்ன வெங்கடாம் பள்ளியில் சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று பூசாரி ஒருவர் சிவலிங்கத்திற்கு எண்ணெய் அபிஷேகம் செய்தார்.
சிவலிங்கத்தின் மீது ஊற்றப்பட்ட எண்ணெய் பால் போல் மாறி வழிந்தோடியது. இந்த நிகழ்வு சுற்று வட்டார கிராமங்களில் காட்டுத் தீயாக பரவியது. இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். எண்ணெய் பால்போல் வழிந்த காட்சியை கண்டு பரவசம் அடைந்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் கோவிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிகழ்வுக்கான காரணம் குறித்து அறிவியல் பூர்வ விளக்கமோ அல்லது அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.
பக்தர்கள் தெய்வீக அதிசயமாக கருதும் நிலையில் சிலர் இதன் உண்மை நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.