இந்தியா

பம்பை ஆற்றில் துணிகளை வீச வேண்டாம் - சபரிமலை பக்தர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

ஆற்றின் தூய்மையை பாதுகாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பம்பை ஆற்றில் துணிகளை வீச வேண்டாம் என்று சபரிமலை பக்தர்களுக்கு அமைச்சர் ரமேஷ் சென்னிதலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சபரிமலை மண்டல பூஜை

சபரிமலையில் வரும் 16-ந்தேதி தொடங்கும் மண்டல பூஜைக்கான இறுதிப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த பிறகு கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் ஆடைகளையும் காலணிகளையும் வீசுவதையோ அல்லது பல் துலக்கிய பிறகு ஆற்றில் எச்சில் துப்புவதையோ தவிர்க்க வேண்டும் என்றும், ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சபரிமலை சீசன்

ஆற்றில் ஆடைகளையும் காலணிகளையும் வீசுவது எந்தவொரு மத வழக்கத்திலோ அல்லது சம்பிரதாயத்திலோ இல்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், பக்தர்கள் இச்செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சபரிமலை சீசனுக்கான முன்னேற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், பெரும்பாலான பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டது. தொண்ணூறு சதவீதப் பணிகள் முடிந்துவிட்டன, மீதமுள்ளவை விரைவில் நிறைவடையும் என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT