இந்தியா

நேபாளத்தில் சிக்கிய எஞ்சியவர்களை மீட்க போராடி வருகிறோம்- அமைச்சர் ராஜ்மோகன்

டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களும் உடல் நலத்துடன் உள்ளனர்.

நேபாளத்தில் இருந்து தமிழர்கள் மீட்கப்பட்டது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

நேபாளம் வெள்ளப்பெருக்கில் சிக்கி மீட்கப்பட்ட 21 பேருடன் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட விமானம் 3.45-க்கு டெல்லி வந்தடைந்தது.

இதனைதொடர்ந்து, தமிழர்களை மீட்டு அழைத்துவர முதலமைச்சர் விஜய் அமைத்த அமைச்சர்கள் குழு நேபாளத்தில் இருந்து மீட்டு வரப்பட்ட 21 பேரையும் டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தனர்.

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் ஆகியோர் தப்பிப்பிழைத்து 21 தமிழர்களுடன் சந்தித்து பேசினர்.

மீட்கப்பட்ட 21 பேரும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து, இன்று இரவு 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் ராஜ்மோகன்

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:-

நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்களுடன் பத்திரமாக டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதால் எஞ்சியவர்களை மீட்க போராடுகிறோம்.

மீட்கப்பட்டவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களும் உடல் நலத்துடன் உள்ளனர். பலர் வெள்ளத்தில் பாஸ்போர்டுகளை இழந்துள்ளனர்.

மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்ட 21 தமிழர்களும் இன்றிரவு விமானம் மூலம் சென்னை அழைத்து செல்லப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.