இந்தியா

Middle East Crisis: இந்தியாவில் ஆணுறைகள் விலை 50 சதவீதம் வரை உயரும் அபாயம்!

இந்தியாவின் ரூ.8,170 கோடி மதிப்பிலான ஆணுறை உற்பத்தித் தொழில், கடுமையான விநியோகப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.

ஈரான் போரினால் இந்தியாவின் ரூ.8,170 கோடி மதிப்பிலான ஆணுறை உற்பத்தித் தொழில், கடுமையான விநியோகப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.

இதன் விளைவாக, ஆணுறை விலைகள் 50 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும், சந்தையில் கடுமையான பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

போரின் காரணமாக கடல்வழி வர்த்தகப் பாதைகள் தடைபட்டதும், உற்பத்திக்குத் தேவையான பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் மசகு எண்ணெய்களின் விநியோகப் பற்றாக்குறையுமே இதற்கான முக்கியக் காரணங்களாகும்.

ஆணுறை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் அம்மோனியா விலை 40-50 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ள நிலையில், பேக்கேஜிங் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக நாட்டில் ஆண்டுக்கு 400 கோடிக்கும் அதிகமான ஆணுறைகளை உற்பத்தி செய்யும் HLL லைஃப்கேர் லிமிடெட் மற்றும் மேன்கைண்ட் பார்மா போன்ற பெரிய நிறுவனங்கள் தற்போது சவால்களை எதிர்கொண்டுள்ளன.

குடும்பக் கட்டுப்பாடு மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்களைத் தடுப்பதில் ஆணுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றின் விலை உயர்வு பொது சுகாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் உள்ள மருந்தகங்கள் ஏற்கனவே விநியோகத் தடைகளைச் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.