இந்தியா

அம்பானி குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜாம்நகர் வந்தார் மார்க் ஜூக்கர்பர்க்

திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் ஜாம்நகர் வந்துள்ளார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கு ராதிகா மெர்ச்சன்ட் உடன் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 3-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தனது மனைவியுடன் ஜாம்நகர் வந்துள்ளார்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மார்க் ஜூக்கர்பர்க் வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

முன்னதாக ஜாம்நகர் சுற்றுவட்டார மக்கள் அனைவரையும் அழைத்த அம்பானி குடும்பம், திருமண நிகழ்ச்சிகளின் அங்கமாக 51 ஆயிரம் பேருக்கு விருந்து அளித்தது. இதில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அம்பானி குடும்பத்தினர் அனைவரும் உணவு பரிமாறினர்.

SCROLL FOR NEXT