இந்தியா

GST| மார்ச் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.2 லட்சம் கோடியாக உயர்வு

இது கடந்த ஆண்டு மார்ச் மாத வருவாயை விட 8.2 சதவீதம் அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் வசூலாகும் ஜி.எஸ்.டி விவரங்களை மாதந்தோறும் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகி இருக்கிறது. உள்நாட்டு விற்பனை மற்றும் இறக்குமதி மூலம் கிடைத்த வரி வருவாய் ஆகியவை இதில் அடங்கியுள்ளதாக அரசு கூறியுள்ளது.

அந்தவகையில் உள்நாட்டு வருவாய் ரூ.1.46 லட்சம் கோடிக்கு அதிகமாகவும், இறக்குமதி வருவாய் ரூ.53,861 கோடியாகவும் உள்ளது. ரூ.2 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலில் திரும்ப வழங்கிய தொகை ரூ.22,074 கோடி ஆகும். மீதமுள்ள நிகர ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.78 லட்சம் கோடி ஆகும். இது கடந்த ஆண்டு மார்ச் மாத வருவாயை விட 8.2 சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த நிதியாண்டில் (2025-26) நாட்டின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.22.27 லட்சம் கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை விட 8.3 சதவீதம் அதிகம் ஆகும்.