இந்தியா

ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு மராத்தி கட்டாயம்: மகாராஷ்டிரா அரசு அதிரடி

ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் கட்டாயம் மராத்தி தெரிந்திருக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்டோ-ரிக்சா, டாக்சி டிரைவர்கள் கட்டாயம் மராத்தி தெரிந்திருக்க வேண்டும் என்பதை அமல்படுத்துவதற்காக வருகிற மே 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை போக்குவரத்துத்துறை சிறப்பு சரிபார்ப்பு பணியை தொடங்க இருப்பதாக அமைச்சர் பிரதாப் சர்னாய்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில் "இந்த நடவடிக்கையின்போது டிரைவர்களுக்கு மராத்தி தெரியாது என்பதனாலேயே லைசென்ஸ் ரத்து செய்யப்படாது. ஆனால், விதிகளை மீறிய சட்டவிரோாத போக்குவரத்த்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுள்ள சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

மாநிலம் முழுவதும் உள்ள 59 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மூலம் இந்த பணி தொடங்க இருக்கிறது. ஒருவர் மகாராஷ்டிராவில் தொழில் தொடங்க விரும்பினால், அவருக்கு மராத்தி தெரிந்திருப்பது அவசியமாகும்.