மணிப்பூரில் தற்காலிக அமைதி திரும்பியிருந்த நிலையில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
காங்போக்பி மாவட்டத்தில் நியூ கைதல்மன்பி பகுதியில் உள்ள லோய்போல் குல்லென் கிராமத்தில் இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான மோதலில் அக்கிரமத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் கலவரமாக சூழல் நிலவி வருகிறது. குக்கி இனத்தை சமூகத்தினரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் 7 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் குக்கி இன்பி மணிப்பூர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் காங்போக்பி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூடுதல் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறியப் பாதுகாப்புப் படையினர் அப்பகுதி முழுவதும் தீவிரத் தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர்.